Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயை‌ப் ‌பி‌ரி‌ந்த ஆ‌ட்டு‌க் கு‌ட்டி தாயுட‌ன் சேர‌்‌ப்பு

தாயை‌ப் ‌பி‌ரி‌ந்த ஆ‌ட்டு‌க் கு‌ட்டி தாயுட‌ன் சேர‌்‌ப்பு
திருச்செந்தூரில் செந்தூர் ‌விரைவு ர‌யி‌லை தொடங்கி வைக்க வந்த மத்திய அமை‌ச்ச‌ர் லாலு பிரசாத்துக்கு பரிசாக வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டி தாய்ப்பாலுக்கும், தாய்ப்பாசத்துக்கும் ஏங்கித் தவி‌த்தது. அதனா‌ல் அத‌ன் தாயுட‌ன் சே‌ர்‌க்க லாலு முய‌ற்‌சி எடு‌த்து‌ள்ளா‌ர்.

தன‌க்கு ப‌ரிசாக ‌கிடை‌த்த ஆ‌ட்டு‌க்கு‌ட்டி, அத‌ன் தாயை‌ப் ‌பி‌ரி‌ந்து த‌வி‌ப்பதை‌க் கண்டு நெகிழ்ந்த லாலு அதன் தாய் ஆட்டை தூத்துக்குடியில் இருந்து டெல்லிக்கு குளு, குளு ரெயிலில் அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே `செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் தொடக்க விழா கடந்த 8-ந் தேதி திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் நடந்தது. மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் இந்த ரெயிலை தொடங்கி வைத்தார். அ‌ப்போது யாதவ சமுதாய‌த்‌தின‌ர், லாலுவு‌க்கு ‌பிற‌ந்து 20 நா‌ட்களே ஆன ஆ‌ட்டு‌க்கு‌ட்டியை ப‌ரிசாக வழ‌ங்‌கின‌ர்.

அழகான அந்த ஆட்டுக்குட்டியை தன்னுடன் டெல்லிக்கு எடுத்துச் சென்ற லாலு பிரசாத், அதனை செ‌ல்ல‌ப்‌பிரா‌ணியாக வள‌ர்‌த்து வ‌ந்தா‌ர்.

பால் குடிக்கும் பருவத்தில் தாயைப் பிரிந்து வந்த இந்த சின்னஞ்சிறு குட்டிக்கு அவ்வப்போது புட்டிப்பால் கொடுத்தனர். ஆனால் அது புட்டிப்பாலை சரிவர குடிக்கவில்லை. தாய்ப்பாலுக்கு ஏங்கி தவித்தது. புட்டிப்பால் குடிக்காமல் மெலிந்தது. சோர்வடைந்து உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

இ‌ந்த ‌விஷய‌ம் லாலுவின் கவனத்துக்கு வந்ததும், உடனடியாக கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆட்டுக் குட்டியை பரிசோதித்து, தாய்ப் பாலுக்கும், தாய்ப் பாசத்துக்கும் அந்தக் குட்டி ஏங்குவதாகவும், உடனடியாக அந்தக் குட்டியை தாயுடன் சேர்த்தால்தான் குட்டி பிழைக்கும் என்றும், இல்லையென்றால் அதன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஒரு ஆட்டுக் குட்டி, தன்னால் தாயை இழந்து பரிதவிப்பதைக் கண்டு லாலு மிகவும் மனம் நெகிழ்ந்தார். தாய் ஆட்டைக் கொண்டு வந்து பால் கொடுத்து குட்டியை காப்பாற்றுவதுடன், தாயையும், குட்டியையும் சேர்த்து வைக்க லாலு பிரசாத் முடிவு செய்தார்.

அந்தக் குட்டியின் தாயைக் கண்டு பிடித்து டெல்லிக்கு அனுப்பி வைக்க தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்தது. அத‌ன்படி ஆ‌ட்டு‌க்கு‌ட்டி வா‌ங்க‌ப்ப‌ட்ட இ‌ட‌‌த்தை ‌சிரம‌ப்ப‌ட்டு க‌ண்டு‌பிடி‌த்த அதிகாரிகள், முடிவைத்தானேந்தல் கிராமத்துக்குச் சென்று லாலுவுக்கு பரிசளிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியின் தாய் ஆட்டை வளர்த்து வரும் விவசாயியைத் தேடினார்கள். அவர் வெளியூருக்கு சென்றிருப்பதாக அறிந்து அவரை ஒரு ஆளை அனுப்பி உடனடியாக வரவழைத்தனர்.

அவரிடம் தாய் ஆட்டை தரும்படி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர் முதலில் அந்த தாய் ஆட்டை கொடுக்க மறுத்து விட்டார். இந்த ஆட்டை வாங்கி வளர்க்கத் தொடங்கிய பிறகுதான் என் வீடே விருத்திக்கு வந்தது. ஆகவே அதிர்ஷ்டமான இந்த ஆட்டைத் தரமாட்டேன் என்று அவர் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதலில் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தனர். தாய் ஆட்டை தரும்படியும், அதற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் விவசாயி ஒப்பு‌க்கொ‌ள்ள‌வி‌ல்லை.

ஒரு குட்டியை கப்பாற்ற தாயுடன் சேர்ப்பதுதான் நல்லது என்றும், குட்டியைக் காப்பாற்ற வேண்டுமானால் தாய்ப்பால் அவசியம். ஆகவே அதற்காகவும் தாயை குட்டியுடன் சேர்ப்பது அவசியம் என்றும் அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.

பலமணி நேரம் போராடி இறுதியில் அதிகாரிக‌ளி‌ன் பே‌ச்சை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட ‌விவா‌சி‌யியு‌ம், குட்டியைக் காப்பாற்ற தாய் ஆட்டை தர மனிதாபிமானத்துடன் ஒத்துக் கொண்டார். ஆனால் தனது மனிதாபிமானத்துக்கு அவர் விலையாகப் பணம் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். விலையே இல்லாமல் தாய் ஆட்டை அதிகாரிகளுடன் அனுப்பி வைக்க அவர் சம்மதித்தார்.

ஆனால் அப்போது தாய் ஆடு அவரது வீட்டில் இல்லை. மேய்ச்சலுக்கு போய் இருந்த ஆட்டை ஒருவழியாக, உள்ளூர் பிரமுகர்கள் மூலம் தேடிக் கண்டு பிடித்தனர். பின்னர் கண்ணீர் மல்க தாய் ஆட்டை விவசாயி மதுரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து தாய் ஆடு, காரில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து நேற்று ரயிலில் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil