ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம்.
FILE
இவர் அவ்வாறு ஒருமுறை வெளியே கையில் விளக்கோடு சென்றபோது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலர் முதியவரை பார்த்தனர்.
முதியவரின் அருகே வந்த அவர்கள் மரியாதையின்றி, 'உனக்குத்தான் கண் தெரியாதே, பின் எதற்காக கையில் விளக்கை எடுத்து செல்கிறாய் என கேலி செய்து சிரித்தனர்.
FILE
வாலிபர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த அந்த முதியவர். 'எனக்கு கண் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த விளக்கை நான் எனக்காக கொண்டுவரவில்லை. உங்களைபோல கண் நன்றாக தெரிந்தவர்கள் என் மீது மோதாமல் இருக்கத்தான் இந்த விளக்கு' என்றார்.
முதியவரின் பதிலை கேட்ட வாலிபர்கள் தங்களது முட்டாள்தனமான செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இக்கதையில், நாம் பேசும்முன் யாரையும் புண்படுத்தாமல் சரியாகத்தான் பேசுகிறோமா என நன்றாக யோசித்துவிட்டு பேசவேண்டும் என்னும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.