இதில் பலவும் உங்களுக்கு விடை தெரிந்த விடுகதையாகத்தான் இருக்கும். படித்துப் பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
1. கொண்டையில் சிவப்பு பூச் சூடியவள், அதற்கே இவ்வளவு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொள்வாள், அவள் யார்?
2. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன?
3. பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு பஞ்சுபோன்ற சதை. அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம் வெள்ளை நிறம். அது என்ன?
4. பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?
5. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம். அது என்ன?
6. பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?
7. வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது. அது என்ன?
பதில்கள்
1. சேவல்
2. செருப்பு
3. தேங்காய்
4. தேயிலைத் தூள்
5. திரைப்படம்
6. தலையணை
7. துணிப்பை
என்ன குழந்தைகளா இன்று 7 விடுகதைகளை அறிந்து கொண்டீர்கள் அல்லவா? உங்களுக்குத் தெரிந்த விடுகதைகளையும் அனுப்பலாம்.