விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
விடுகதைக்கான கேள்விகள் அடுத்த பக்கத்தில்.
நீங்கள் யோசித்திருந்த விடைகள் சரிதானா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.
1. தீக்குச்சி
2. தபால் தலை
3. கடல் அலை
4. சாமரம்
5. வெங்காயம்
6. செல்பேசி