உங்களுக்குத் தெரிந்த விடுகதைகள்தான். ஆனால் மறந்திருப்பீர்கள். நினைவுபடுத்த வேண்டியது எங்கள் வேலையல்லவா?
1. ஒரு சாண் குதிரைக்கு உடம்பெல்லாம் பல். அது என்ன?
2. நூல் நூற்கும் இராட்டை அல்ல; ஆடை நெய்யும் தறி அல்ல. அது என்ன?
3. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
4. காட்டில் கிடைத்த கட்டைதான். ஆனால் கான மழை பொழியும். அது என்ன?
5. தரையில் நடந்தால் ஒலி எழுப்பும் கொலுசு அல்ல, விரலில் ஒட்டிக் கொள்ளும் மோதிரம் அல்ல. அது என்ன?
6. இந்த நீதிபதிக்கு உயிர் இல்லை, ஆனால் ஒழுங்கான நியாயம் தருவார். அது என்ன?
7. உமி போல் பூ பூக்கும்; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன?
விடைகள் அடுத்த பக்கம்
விடைகள்
1.சீப்பு
2.சிலந்தி
3.உதடு-பற்கள்
4.மூங்கில்
5.மெட்டி
6.தராசு
7.நெல்லிக்காய்