Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மீ‌ண்டு‌ம் வ‌ந்து‌வி‌ட்டா‌‌ர் வாசு‌கி பா‌ட்டி

‌மீ‌ண்டு‌ம் வ‌ந்து‌வி‌ட்டா‌‌ர் வாசு‌கி பா‌ட்டி
, செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (16:01 IST)
உட‌‌ல்‌நிலை ச‌ற்று பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் கட‌ந்த இர‌ண்டு வார‌ங்களாக கதை சொ‌ல்ல வராத வாசு‌கி பா‌‌ட்டி இ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்.

ச‌ரி கதையை‌த் துவ‌க்குவோமா?

சூஃ‌பி ஞா‌னி எ‌ன்ற மகா‌‌‌ன் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அவரை‌ப் பார்க்க பணக்காரர் ஒருவ‌ர் வ‌ந்‌திரு‌ந்தா‌ர். அவரது உடைகளும், நகைகளும் ஒளிவீசிய அளவுக்கு அவர் முகத்தில் ஒளி இல்லை. ஏதோ வருத்தம் அவருடைய மனதைச் சூழ்ந்திருந்தது. அவரிடம் ஞானி கேட்டார்: ‘‘ஏன் கவலையாக இருக்கிறீர்கள்? என்ன பிரச்னை?’’எ‌ன்று.

அத‌ன்று பணக்காரர், ‘‘என்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கிறது. வீடு, மனை, வயல் என்று நிறைய சொத்துகள். ஆனாலும் மனதில் நிம்மதி இல்லை.’’ ‘‘அந்த சொத்துகள்தான் உங்கள் கவலைக்குக் காரணம்,’’ என்று அவருக்கு பதில் சொன்னார் ஞானி. பிறகு, பக்கத்திலிருந்த ஒரு சிறு குழந்தையிடம் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்தார். ஒரு கையால் குழந்தை வாங்கிக் கொண்டது.

இரண்டாவது பழத்தைக் கொடுத்தார். அதையும் வாங்கிக் கொண்டது. மூன்றாவதாக இன்னொரு பழம் கொடுத்தார். ஏற்கெனவே தன் கைகளில் வைத்திருந்த பழங்களை மார்போடு அணைத்துக் கொண்டு, மூன்றாவது பழத்தை வாங்க முற்பட்டது. ஆனால், அதனால் முடியவில்லை. மார்போடு தாங்கியிருந்த பழங்கள் கீழே விழுந்தன.

அவ்வாறு விழுந்த பழங்களைப் பார்த்து அழுதது குழந்தை. அதோடு மூன்றாவது பழத்தையும் பற்றவும் முனைந்தது. ‘‘நீங்கள் இந்தக் குழந்தை மாதிரிதான்,’’ ஞானி சொன்னார். ‘‘ஓரளவுக்கு செல்வம் சேர்ந்தபிறகு அதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லை. மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஏற்கனவே சேர்த்திருந்த பொருள் கைவிட்டுப் போய்விடக்கூடாதே என்றும் பரிதவிக்கிறீர்கள்.

தேவைக்கும் அதிகமாக நிறையப் பொருள் சேர்வதே ஒரு சுமைதான். குற்றப் பின்னணியில் அந்தப் பொருள் சேர்க்கப்பட்டிருக்குமானால் அந்த உணர்வும் சேர்ந்து உங்கள் உள்ளத்தை அழுந்துகிறது. உங்கள் பிரச்னை இதுதான். மிகுந்திருக்கும் உங்கள் செல்வத்தை இல்லாதோருக்குக் கொடுத்துப் பாருங்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் அவர்கள் முகம் மலர்வதைப் பாருங்கள்.

அந்தச் சிரிப்பில் உங்கள் உள்ளத்து வேதனைகள் ஆவியாகி மறைவதை உணர்வீர்கள்.’’

பணக்காரர் புரிந்துகொண்டார். தான் சேர்த்த இத்தனை செல்வங்களில் முறையற்று சேர்ந்தவை எத்தனை; எத்தனை பேரை இதற்காக வருத்தியிருக்கிறோம் என்றெல்லாம் யோசித்துப் பார்த்தார். தனது செ‌ல்வ‌ங்களை எ‌ல்லா‌ம் இ‌ல்லாத ம‌க்களு‌க்கு ‌பி‌ரி‌த்து‌க் கொடு‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் ‌எ‌ல்லையை‌ அடை‌ந்தா‌ர்.

இ‌தி‌ல் இரு‌ந்து எ‌ன்ன பு‌ரி‌கிறது குழ‌ந்தைகளா? எதுவுமே அளவு‌க்கு ‌மி‌ஞ்‌சினா‌ல் அ‌மி‌ர்தமு‌ம் ந‌‌‌ஞ்சாகு‌ம். எனவே ‌‌நீ‌ங்க‌ள் வ‌ள‌ர்‌ந்து ஆளானது‌ம் இதனை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வாழு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil