Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாண்ட்விச் பிறந்த கதை தெ‌ரியுமா

சாண்ட்விச் பிறந்த கதை தெ‌ரியுமா
, திங்கள், 25 மே 2009 (17:55 IST)
இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இடையே காய்கறி அல்லது இறைச்சி வைத்த சாண்ட்விச் தற்போது உலகம் முழுவதும் பிரபலமான உணவு. அது எப்படிப் பிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா குழ‌ந்தைகளா?

இங்கிலாந்தில் 18-வது நூற்றாண்டில் சாண்ட்விச் என்ற ஊரைச் சேர்ந்த ஜான் மான்டேக் என்ற அரச அதிகார பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் இருந்தார்.

அவர் சீட்டாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மணிக்கணக்கில் சீட்டு விளையாடும் அவர் இடையில் சாப்பிடுவதற்காகக் கூட ஆட்டத்தை நிறுத்த மாட்டார்.

அப்போது அவர் தனது ஊழியரிடம் இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே சமைத்த இறைச்சியை வைத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறுவது வழக்கம். அதன் மூலம் அவர் கை கழுவ வேண்டிய அவசியமில்லாமல், இடையில் நிறுத்தாமல் சீட்டாட்டத்தைத் தொடர முடிந்தது.

இதே‌ப் போ‌ன்று சா‌ப்‌பிட ‌விரு‌ம்‌பிய பலரு‌ம், ஜான் மான்டேக்கின் ஊர்ப் பெயரைக் குறிப்பிட்டு, சாண்ட்விச்சைப் போல தங்களுக்கும் வேண்டும் என்று மற்றவர்களும் உணவகங்களில் கே‌ட்க ஆரம்பித்தனர்.

இ‌ப்படி ஒருவரது சோ‌ம்பே‌‌றி‌த்தன‌‌ம் ம‌ற்று‌ம் ‌‌சீ‌ட்டா‌ட்ட‌த்‌தி‌ன் ‌மீதான வெ‌றி‌யி‌ன் காரணமாக உடலு‌க்கு ந‌ல்லதாக சா‌ன்‌ட்‌வி‌ட்‌ச் ‌கிடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதை‌த்தா‌ன் கெ‌ட்ட‌திலு‌ம் ஒரு ந‌ல்லது எ‌ன்று சொ‌ல்வா‌ர்களோ?

தற்போது அமெரிக்காவில் தினசரி 3 கோடி சான்ட்விச்கள் சாப்பிடப்படுகின்றன. அதாவது, சராசரியாக ஒரு மனிதர் தினசரி ஒரு சாண்ட்விச்சுக்கு மேல் சாப்பிடுகிறார்.

இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் 180 கோடி சாண்ட்விச்கள் கடைகளில் வாங்கப்படுகின்றன. இது வீடுகளில் தயாரிக்கப்படும் சாண்ட்விச்களை விட அதிகம்.

Share this Story:

Follow Webdunia tamil