Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறு குழந்தைகளை காலை வெயில் படுமாறு வைப்பதால் என்ன நன்மைகள்...?

சிறு குழந்தைகளை காலை வெயில் படுமாறு வைப்பதால் என்ன நன்மைகள்...?
, புதன், 27 ஏப்ரல் 2022 (17:32 IST)
காலை வெயிலில் விட்டமின் D உள்ளது. இது குழந்தையின் தோலிற்கு மிகவும் நல்லது. இயற்கையாக பிறந்த ஓரிரு நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய மஞ்சள் காமாலையை குணபடுத்தும் சக்தி காலை வெயிலில் உள்ளது.


காலை இளம் வெயிலில் சற்று நேரம் சூரிய ஒளி படும்படி குழந்தையை வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தையின் கண்கள் முழுமையாக திறப்பதோடு வைட்டமின் டி சத்தும் கிடைக்கும்.

குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி உடைகள் சிறந்தவை. காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக்கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பதால், விட்டமின் டி சத்து கிடைக்கும்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பலர் குழந்தை பிறந்ததுமே சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். இது தவறான பழக்கம். இதனால், கலோரி அதிகமாவதோடு, குழந்தைக்கு இன்பெக்‌ஷனும் வரக்கூடும்.

இன்றும் பெரியோர்கள் இருக்கும் வீட்டில் பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் காண்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் இதை அறிவுறுத்துகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்ன நன்மைகள் !!