வீட்டில் இயற்கையான முறைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பார்ப்போம்.
* குழந்தையின் தோலை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் பாதுக்காக்க பயத்தமாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குழந்தையின் சருமத்தை பாதுகாக்க, குழந்தையை குளிக்க வைக்கும் போது, சிறிதளவு பயத்தமாவு, சிறிதளவு பசும் பால் இரண்டையும் ஒன்றாக கலந்து, குழந்தையின் உடலில் தடவி நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் மற்றும் சருமம் இரண்டும் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் குறிப்பாக பொலிவுடனும் காணப்படும்.
* குழந்தையின் கருமை நிறத்தை போக்க வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாக ஊறவைத்து பின்பு உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஓரு மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு கடலை மாவை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் நிறம் வெண்மையாக மாறும்.
* குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், குழந்தை வெளியே செல்லும்போது ஏதேனும் ஒரு சன் வேஸ்லினை குழந்தையின் தோலிற்கு பயன்படுத்தினால், குழந்தையின் தோல் மற்றும் சருமத்தை பாதுகாக்கலாம்.
* சந்தன கட்டையை பால் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி உரசி அவற்றை குழந்தையின் தோல் பகுதில் பயன்படுத்தினால் குழந்தையின் தோல் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மற்றும் எந்த ஒரு தோல் பிரச்சனைகளும் வராமல் பாதுகாக்க மிகவும் பயன்படுகிறது.
* குழந்தைகளுக்கு தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, பாதாம், திராட்சை போன்றவற்றை அதிகளவு கொடுத்து வர குழந்தையின் உடல் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.