Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு...!

Advertiesment
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு...!
குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதும் உள்ளார்ந்த செயலாகும். அதாவது, ஒருவரது ஆர்வம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு மொழியைக்கற்றுக்கொள்வது அவசியமாகிறது.
ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து தன்னைச்சுற்றி பேசப்படும் மொழியை கூர்ந்து கவனிக்கிறது. மேலும் மொழியை கற்றுக்கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும்,  அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் வளரும்போது அதை தாங்களாகவே கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.
 
ஒரு தாய் தன் குழந்தையிடம் இது பூனை என்று கூறுகிறார். இதை அந்தக் குழந்தை நன்கு கவனித்துக்கொள்கிறது. பின்னர் அந்த தாய் இது என்ன? என்று  பூனையை சுட்டிக்காட்டி கேட்கும்போது, அந்தக்குழந்தை பூனை என்று சரியாக பதில் அளித்தால், அதை பாராட்டி அந்த தாய் ஒரு இனிப்பு பரிசளிக்கிறார்.  அப்போது அந்தக்குழந்தையின் மனதில், இது ஒரு நாய், இதன் பெயரை சரியாக சொன்னால் தனக்கு இனிப்பு கிடைக்கும் என்ற உணர்ந்துகொள்கிறது.
 
எனவே அடுத்த முறை நாயை பார்த்ததும் அந்தக் குழந்தை நாய் என்று சரியாக பேசுகிறது. இங்கே பாராட்டு என்பது இனிப்பாக மட்டும் இருக்கவேண்டும்  என்பதில்லை. ஒரு அன்பான புன்னகை, ‘ஹை நீ சரியாகச் சொல்லி விட்டாய்’ என்று ஒரு பாராட்டு போன்றவற்றின் மூலமும் குழந்தையை  உற்சாகப்படுத்தலாம். இவ்வாறாகத்தான் குழந்தைகள் ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொள்ளத்தொடங்குகிறது.
 
வீட்டில் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஒரு மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் பிழையாக எதையும் உச்சரித்தால் அதையும் திருத்துகிறார்கள். மேலும் அவர்கள் சரியாகச்செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பரிசளித்து, பாராட்டி ஊக்கப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் சிறிய  தண்டனைகள் மூலமும் அவர்களது தவறுகளை திருத்துகிறார்கள்.
 
கண்டிப்பும் தண்டனையுமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். சதா  திட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு  ஆளாகிவிடுவார்கள். அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான பக்கோடா குழம்பு தயார் செய்ய...!