Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடியோ கேம்ஸ் விளையடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும்

Advertiesment
வீடியோ கேம்ஸ் விளையடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும்
விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.

 
குழந்தகளை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. சில குழந்தைகளிடம் மோசமான பாதிப்பையும் இந்த  விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
 
வீடியோ கேம்ஸ் விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட  செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.
 
பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம்  பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.
 
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக  விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.
 
உங்கள் குழந்தைகள் தினமும் 1 அல்லது 2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.
 
குழந்தகளின் கவனத்தை திசை திருப்ப:
 
உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள்.
 
குழந்தைகளை விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும் என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். அந்த  விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன் என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.
 
உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...!