குளிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு: குளிர்காலத்தில் கட்டாயமாக வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இவ்வாறு செய்வதினால், பனி சாரல்கள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கும். மாலை நேரங்களில் ஜன்னல் கதவுகளை சாத்தி வைக்கவும். அதேபோல் காலை நேரங்களில் நல்ல சூரிய வெளிச்சம் வந்த பிறகு ஜன்னல் கதவுகளை திறந்து வையுங்கள்.
குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும்.
குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்கலாம்.
தூங்கும் பொழுது பாய் பயன்படுத்தினால் குளிர் தாங்கும். குழந்தைகளை வெறும் தரையில் தூங்க வைக்கக்கூடாது. உடல் முழுவதும் நன்றாக போர்த்தி கொள்ள வேண்டும்.
முகத்தை போர்வையால் மூடிக்கொள்ள கூடாது. கிருமி பாதிப்பு வராமல் இருப்பதற்கு கொதிக்கவைத்த நீரையே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக குளிர்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறாமல் இருப்பதால் தோலில் சற்று உலர் தன்மை ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு கால், கைகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட வேண்டும்.