Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " வீட்டிலே செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (16:34 IST)
பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் ஆரோக்கியமான மற்ற இணை உணவுகளை கொடுப்பது நல்லது. 1 வயதில் இருந்து அனைத்து வகையான திட உணவுகளையும் கொடுத்து பழகவேண்டும். 
 
குறிப்பாக பழங்கள் , காய்கறிகள், முட்டை, கீரை வகைகள் , தானியங்கள், மீன் , இறைச்சி உள்ளிட்ட சத்தான உணவுகளை கொடுத்து பழவேண்டும். பழங்கால உணவுகளாக களி , கூழ், கேழ்வரகு அடை உள்ளிட்டவரை கொடுத்து வந்தால் ஆரோக்கியமாக வளர்வார்கள். ஆங்கில உணவு வகைகளான செர்லாக், கலப்பட மாவுகள், பீட்சா, பர்கர் ரொட்டிகள் போன்ற உணவுகளை தவிர்ப்பதால் வயதிற்கு ஏற்ற சீரான வளர்ச்சியை காண முடியும். இந்நிலையில் வீட்டிலேயே சத்தான, ஆரோக்கியமான "செர்லாக் மாவு " தயார் செய்வது எப்படி என பார்க்கலாம். 
 
ஹோம்மேட் செர்லாக் செய்ய தேவையான பொருட்கள்: 
 
சிவப்பு அரிசி – 50 கிராம்
துவரம் பருப்பு – 10 கிராம்
பச்சைப் பயறு – 10 கிராம்
பாசி பருப்பு – 10 கிராம்
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை தலா - 10 கிராம்
உலர்ந்த பட்டாணி – 10 கிராம்
கொண்டைக்கடலை – 10 கிராம்
வெள்ளம் 20கிராம் 
கோதுமை-10 கிராம்
கொள்ளு  - 5 கிராம்
சுக்கு தூள் - 1 டீஸ்பூன் 
சீரகம் – 1 டீஸ்பூன்
 
செய்முறை:
 
மேற்கண்ட அனைத்தயும் ஒரு முறையை நன்றாக கழுவி 3-4 நாட்களுக்கு வெயிலில் காயவைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த அனைத்து தானியங்களையும் வாணலியில் மிதமான தீயில் அரை வறுவலாக வெறுத்தெடுக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைத்து 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெயில் காலத்தில் பீர் குடித்தால் ஆபத்தா? மருத்துவர்கள் கூறுவது என்ன?