தாய்ப்பால் போதவில்லை என்றால், மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொடுக்கலாம்.
பாலை நன்கு காய்ச்சியப் பின்னரே கொடுக்க வேண்டும்.
மாட்டுப்பால் கொடுக்கும் பொழுதும், கூடுதல் உணவு மூலமும் இரும்பு மற்றும் வைட்டமின் 'சி' கொடுக்கவும்.
ஒரு நாளுக்கு 120-180 மி.லி பாலை, ஓவ்வொரு முறையும், 1 தேக்கரண்டி சக்கரையுடன், 6-8 முறை கொடுக்க வேண்டும்.
கடைகளில் வாங்கும் குழந்தைகள் உணவைப் பயன்படுத்தினால் அட்டையில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றவும். மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கப் பயன்படுத்தும் கப், ஸ்பூன், பாட்டில் மற்றும் நிப்பிள் போன்றவற்றை சுத்தமாக அதிக கவனத்துடன் பயன்படுத்தவும்.
உடல் பருமனைத் தடுக்க, அளவுக்கு அதிகமாக பால் கொடுக்கக் கூடாது.