Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஐந்து: இதனால் லாபமா? நஷ்டமா?

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (10:32 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் தவறவிடப்பட்டுள்ளன. 


 
 
# 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் ஏதும் பெருமளவு இல்லை.
 
# அரசின் மூலதனச் செலவுக்கான தொகை ஒதுக்கீடு எதிர்பார்த்தபடி இல்லை. பலதுறை சார்ந்த வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் வகையில், கூடுதலாக அரசின் செலவுக்கு நிதி ஒதுக்கி இருக்கலாம். 
 
# பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் மூலதன நிதியை மிகக் குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.   இந்த ஆண்டு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.25,000 கோடி தொகை ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
 
# ஜிஎஸ்டி மசோதா எந்த தேதிக்குள் அல்லது எந்த மாதத்திற்குள் திட்டவட்டமாக, நடைமுறைக்கு வரும் என, பட்ஜெட்டில் கூறப்படவில்லை. 
 
# பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு நிர்வகித்து வரும் பங்குகளில், கணிசமான அளவை விற்பனை செய்து, ரூ.45,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என தெரியவில்லை. 
 
# யுனிவர்சல் பேசிக் இன்கம் எனப்படும் எந்த ஊழியராக இருந்தாலும், உலகம் முழுவதும் ஒரே தரப்பு ஊதிய நிர்ணயம் செய்வதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments