ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்: ரயில்வே அமைச்சர் தகவல்
ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்: ரயில்வே அமைச்சர்
இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த சுரேஷ் பிரபு "ரயில்வே பட்ஜெட், நாட்டு நலனையும், ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம்.
கட்டண உயர்வு இல்லாமல், விளம்பரங்கள், வணிகமயமாக்குதல், உபரி நிலம் ஆகியவை மூலம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.
இந்நிலையில், இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.