நாளை தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே துறையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியுதவி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில்வே வழித்தடத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, இரட்டைப்பாதை மற்றும் போக்குவரத்து இடர்பாடுகளை சரிசெய்வது, பாதுகாப்பை மேம்படுத்துவது, மின்மயமாக்குவது ஆகியவற்றுக்காக இந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியுதவி ஒதுக்கீடு செய்ய முடியாத, ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பதினெட்டு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.