சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மத்திய பட்ஜெட்
சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மத்திய பட்ஜெட்
2016-2017 ஆம் ஆண்டுகான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியானது.
புகையிலை மற்றும் சிகரெட் உற்பத்திப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 இல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுவதாக இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பட்ஜெட்டில் முக்கியமான அம்சமாக வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது.