வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பொது பட்ஜெட் அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் வடக்கு பிளாக்கில் உள்ள அச்சகத்தில் பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் நேற்று தெரிவித்தார். பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் 100 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை செயலர் ரத்தன் வாட்டல், வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் போன்ற காரணங்களால் அரசின் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை இலக்கு உயர்த்தப்படும். முந்தைய இலக்கான 3.5 சதவீதத்தை கடைப்பிடித்தாலும், நாட்டின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் இது பாதிக்கும் என்றும் அரசின் கடன் பெருகும் என்று என அதன் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறியுள்ளார்.