இந்தியன் ரயில்வே, உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பு. 13 மில்லியன் மக்கள் இந்தியன் ரயில்வேயை தினமும் தங்கள் வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றனர். இந்தியன் ரயில்வேயை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான 10 உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் 11000 ரயில்கள் இயங்குகின்றன. இவை தினமும் 60000 கி.மீ பயணிக்கிறது.
1.54 மில்லியன் மக்கள் இந்தியன் ரயில்வேயில் பணிபுரிகின்றனர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கணக்கெடுப்பின் படி இந்தியன் ரயில்வே உலகின் 7 மிகப்பெரிய முதலாளி.
நீண்ட இழுவை, குறுகிய இழுவை:
இந்தியாவின் மிக நீளமான ரயில் பயணம் திப்ருகார் மற்றும் கன்னியாக்குமரி இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரெஸ் ஆகும். இது 56 நிறுத்தங்களை கொண்டது. 82.30 மணி நேரம் பயணிக்கும் இந்த ரயில் 4286 கி.மீ பயணிக்கிறது. நாக்புர் மற்றும் அஜ்னி இடையே 3 கி.மீ இடையே ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இது மிக குறுகிய பயண தூரம் ஆகும்.
நிறுத்தம் இல்லை, அதிக நிறுத்தம்:
528 கி.மீ பயணிக்கும் திருவணந்தபுரம்-நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரெஸ் வதோத்ரா, கோட்டா இடையே எந்தவித நிறுத்தமும் இல்லாமல் 6.5 மணி நேரம் பயணிக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுத்தம் இல்லா ரயில் ஆகும். ஹவுரா-அமிர்தசரஸ் எக்ஸ்பிரெஸ் அதிக நிறுத்தங்களை கொண்டது. இது 115 இடங்களில் நிற்கிறது.
150 கி.மீ வேகத்தில் செல்லும் டெல்லி-போபால் ஷதபதி எக்ஸ்பிரெஸ் இந்தியாவின் அதிவேக ரயில் ஆகும். 10 கி.மீ வேகத்தில் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் இந்தியாவின் மிக மெதுவான ரயில் ஆகும்.
மோசமாக நேரத்திற்கு வராத ரயில்:
கவுகாத்தி-திருவணந்தபுரம் ரயில் ஒவ்வொரு முறையும் 10 முதல் 12 மணி நேரம் தாமதமாக வரும். அதன் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரம் 65.5 நிமிடம் ஆகும்.
உச்சரிக்கமுடியாத ரயில் நிலையம்:
வென்கடநரசிம்ஹரஜுவரிபெட இந்த ரயில் நிலையம் தான் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம். இது சென்னை அருகே உள்ள அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் உள்ளது. ஒடிசாவில் உள்ள ஐபி மற்றும் குஜராத்தில் உள்ள ஓட் ஆகிய ரயில் நிலையங்கள் மிக குறுகிய பெயரை கொண்டவை.
ஒரு ரயில் நிலையம், இரண்டு மாநிலங்கள்:
நவபுர் என்ற ரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் உள்ளது. அதன் ஒரு பாதி மகாராஷ்டிரா மற்றும் மறு பாதி குஜராத்தில் உள்ளது.
இரண்டு ரயில் நிலையங்கள் ஒரே இடத்தில்:
ஸ்ரீராம்புர் மற்றும் பெலபுர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் மகாராஷ்டிராவின் அஹ்மெத்நகர் மாவட்டத்தில் உள்ளது, ஆனால் இவை ஒரே பாதையில் எதிரெதிர் பக்கத்தில் உள்ளது.
1981-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி பயணிகள் ரயில் ஒன்று பீகாரில் உள்ள பக்மதி ஆற்றில் விழுந்து சுமார் 800 பயணிகள் இறந்தனர். இது இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து ஆகும்.