இன்று 4 மணிக்கு பிரபல மாடல் அழகி சோனிகா சிங் கொல்கத்தாவில் கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி காயமுடன் உயிர் தப்பினார்.
கொல்கத்தாவில் இன்று அதிகாலை பெங்காலி நடிகை சோனிகா சிங் மற்றும் நடிகை விக்ரம் சாட்டர்ஜி காரில் சென்றுள்ளனர். வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி, பின் அருகில் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சோனிகா சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்ரம் குடிபோதையில் காரை ஓட்டினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.