விஸ்வாசம் உருவானக் கதை – இன்று மாலை முதல் !

திங்கள், 11 பிப்ரவரி 2019 (16:39 IST)
அஜித் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வசூல்சாதனைப் படைத்து வரும் விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படம் இதுவரை அஜித் படம் செய்த சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2.0 க்குப் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளது. அஜித் படங்களுக்குக் குடும்ப ரசிகர்கள் வரமாட்டார்கள் என்ற பேச்சை சுக்கு நூறாக உடைத்து இன்னமும் வார இறுதி நாட்களில்  300க்கும் மேற்பட்ட திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிவருகிறது. இதுவரை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் மட்டும் விஸ்வாசம் படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வீடியோக்கள் வரிசையாக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதை அடுத்து இப்போது விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனைத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பில்ம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 15 வருடங்களாக முன்னணி நாயகியாக காஜல் அகர்வால் ஜொலிக்க இது தான் காரணம்