Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய்லாந்து ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய விஜய்!

Advertiesment
லோகேஷ்
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தாய்லாந்துக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். அங்கு விஜய் நடித்த ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கினார் வெங்கட்பிரபு.

இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது விஜய் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் இந்தியன் 2 vs சூர்யாவின் கங்குவா… ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு!