Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ 2 மே 8 முதல் ஓடிடியில்- எங்கு பார்க்கலாம்?

Advertiesment
வாழ 2
மலையாளத் திரையுலகில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்டு, உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்த Vaazha 2: Biopic of a Billion Brosதிரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
கடந்த 2024-ம் ஆண்டு ஆனந்த் மேனன் இயக்கத்தில் வெளியான வாழ (முதல் பாகம்), சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 40 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வாழ 2  திரையரங்குகளில் வெளியானது.
 
முதல் பாகத்தை விபின் தாஸ் இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குநர் சவின் இயக்கியுள்ளார். விபின் தாஸ் இப்படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், தற்போது வரை உலக அளவில் 230 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மலையாள சினிமாவின்  இண்டஸ்ட்ரி ஹிட்   வரிசையில் இணைந்துள்ளது.
 
ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் எனப் பெரும்பாலான புதுமுகங்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்களே இதில் நடித்துள்ளனர். இருப்பினும், அவர்களின் யதார்த்தமான நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தைப் பெரிய இடத்திற்குக் கொண்டு சென்றது. பள்ளிப் பருவ நினைவுகள், நண்பர்களுக்கு இடையிலான நகைச்சுவை மற்றும் எமோஷனல் தருணங்களை இந்தப் படம் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் பிரபல நடிகர் பசில் ஜோசப் கௌரவத் தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
 
கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்கத் தவறியவர்களுக்காக ஓடிடி அறிவிப்பு வந்துள்ளது.
 
அதன்படி, வரும் மே 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'வாழ 2' திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!