விதிமீறி விடுதி நடத்திய நடிகர் சோனு சூட் மீது வழக்கு

சனி, 9 பிப்ரவரி 2019 (07:19 IST)
பாலிவுட்டில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில்  லவ் அன்ட் லட் என்ற பெயரில் தங்கும் விடுதி மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.


 
இந்த விடுதியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மும்பை மாநகராட்சியில் சோனு சூட் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் விடுதியையும் உணவகத்தையும் நடத்து வருவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
விடுதியை இடிக்க வேண்டும் என்று  மும்பை மாநகராட்சிக்கு புகார்  அனுப்பி உள்ளார்கள். இதைத்தொடர்ந்து சோனு சூட் மீது வழக்கு தொடர மும்பை மாநகராட்சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பெண்களோட உணர்ச்சிகள, ஆசைகள சொல்ற படம்! ஓவியா 90எம்எல் இயக்குனர் பேட்டி