Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர்  வெளியாகியுள்ளது!!

“ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர்  வெளியாகியுள்ளது!!

J.Durai

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (10:11 IST)
"மின்னல் முரளி" மற்றும் "2018 - எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ" ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும்  கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான "ARM" ஏஆர்எம் எனும் - ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார்.
 
மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
 
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. 
 
தற்போது வெளியிடப்பட்ட டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. 
 
இந்த டிரெய்லரில்,  பூமியைத் தாக்கும் ஒரு சிறுகோள், ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் வானத் துகள்களை சிதறடிக்கும் ஒரு அற்புதமான படத்துடன் டிரெய்லர் தொடங்குகிறது, ஒரு வயதான பெண்மணி கதையை விவரிக்கிறார். அதன்பிறகு நடக்கும் வன்முறையையும், நம் கதாநாயகனின் வலிமையான அறிமுகத்தையும் டிரெய்லர் நமக்கு காட்டுகிறது. 
 
2 நிமிடம், 33 வினாடிகள் கொண்ட இந்த  டிரெய்லர், 1900, 1950, மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் வடக்கு கேரளாவில் நடந்த  ஒரு கதையை விரிக்கிறது. டொவினோ மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றுகிறார். வெவ்வேறு தலைமுறைகளான  மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன்— என ஒவ்வொருவரும் ஒரு முக்கிய நிலப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறார்கள். டிரெய்லரின் ஒவ்வொரு பிரேமும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கேரளாவின் செழுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், ஒரு காவிய கதையின் உலகை நம் கண்ணுக்கு விருந்தாக்குகிறது.  "ARM" ஒரு அழுத்தமான கதையுடன் கூடிய புதுமையான அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டிரெய்லர்  உறுதிப்படுத்துகிறது
 
இப்படம் டோவினோ தாமஸ் நடிப்பில், உருவாகும்  50வது படமென்பது குறிப்பிடத்தக்கது. மூன்று கதாப்பாத்திரங்களில் ஒவ்வொன்றையும் தனித்து காட்டும் அவரது அர்ப்பணிப்பு, டிரெய்லரிலேயே தெளிவாகத் தெரிகிறது.
 
திரையரங்குகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும், அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக, களரிப்பயட்டில் விரிவான பயிற்சி பெற்றுள்ளார் டொவினோ. ஜோமோன் டி திரைக்கதையில். ஜானின் ஒளிப்பதிவில், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் "கந்தாரா" புகழ் விக்ரம் மூர் மற்றும் பீனிக்ஸ் பிரபு ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட பரபரப்பான சண்டைக்காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
 
கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி ஆகிய  முன்னணி நடிகைகள் இப்படத்தில் பங்குபெற்றிருப்பது, கூடுதல் சுவாரஸ்யத்தை தந்துள்ளது. சிறந்த பின்னணி இசை, உயர்தரமான VFX மற்றும் அசத்தலான காட்சிகள்  எல்லாம் இணைந்து  "ARM" படத்தை, இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக மாற்றுகிறது.  கேரளாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் "ARM" செப்டம்பர் 12, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. கன்னட வெளியீட்டை ஹோம்பலே பிலிம்ஸ், தெலுங்கிற்கான மைத்ரி மூவி மேக்கர்ஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் இந்தியில் அனில் ததானியின் ஏஏ பிலிம்ஸ், என பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 
 
"ARM" படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன், முக்கிய நடிகர்களான பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கோட்’ படத்தின் டிக்கெட் ரூ.390.. ஸ்நாக்ஸ் கட்டாயம்.. நெட்டிசன்கள் புலம்பல்..!