மீண்டும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - தரமான தளபதி 65 அப்டேட்..!

திங்கள், 16 மார்ச் 2020 (12:48 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று லீலா பேலஸில் நடைபெற்றது. அதையடுத்து படத்தின் டீசர், ட்ரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், மாஸ்டர் படத்தை கொண்டாடுவதற்கு முன்னதாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி , துப்பாக்கி ,சர்க்கார் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றி படைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது மீண்டும் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார்.

சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வருகிற 2021 பொங்கல் பண்டிகையை குறி வைத்து உருவாகும் எனவும் கூறப்படுகிறது. மாஸ்டர் கொண்டாட்டத்தையே இன்னும் முழுமையாக அனுபவிக்காத நிலையில் தற்போது சற்றும் எதிர்பார்க்காத தளபதி 65 அப்டேட் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் போயும் போயும் மீரா மிதுனை பார்த்து காப்பியடித்தாரா விஜய்...?