Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாரா அலிகானை உருகி உருகி காதலித்த சுஷாந்த் - எத்தனை பேரு? குழப்பத்தில் பாலிவுட்!

Advertiesment
சாரா அலிகானை உருகி உருகி காதலித்த சுஷாந்த் - எத்தனை பேரு? குழப்பத்தில் பாலிவுட்!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (08:49 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது தந்தை நடிகை ரியா மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்ப்போது சுஷாந்தின் நண்பர் சாமுவேல் ஹோகிப், சுஷாந்த் கேதார்நாத் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொது அந்த படத்தின் ஹீரோயின் சாரா அலிகானை காதலித்து வந்ததாகவும் இருவரும் நெருக்கமாக பழகியதாகும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால், Sonchiriya படம் வெளியாகி அட்டர் பிளாப் ஆனதால் சாரா சுஷாந்த்தை விட்டு பிரிந்து சென்றதாக அவர் கூறியுள்ளார். சாரா தற்ப்போது அட்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகானும் சுஷாந்த்தை காதலித்துள்ள விஷயம் அங்கு புதிய பிரளயத்தை உருவாக்கியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா ஒரு ட்ரை... ராஜ வம்சத்து ராணியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்!