போகிற போக்கைப் பார்த்தால் சன்னி லியோனை மாற்றி மதர் தெரசாவாக்கிவிடும் போலிருக்கிறது பாலிவுட்.
முன்னாள் நீலப்பட நடிகையான இவரை கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமே இந்தி சினிமா பயன்படுத்தி வந்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை தந்தனர். இப்போது நடிப்புக்கு மட்டுமே வாய்ப்புள்ள வேடங்களாக சன்னி லியோனை தேடி வருகின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளரின் கராச்சி யு ஆர் கில்லிங் மீ நாவலை இந்தியில் நூர் என்ற பெயரில் படமாக்குகின்றனர். சோனாக்ஷி சின்கா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர். கேட்டால், இந்த வேடம் கவர்ச்சியானது அல்ல, நடிப்புக்கு ஸ்கோப் உள்ள வேடம் என்கிறார்கள்.
சுனில் சிப்பி இயக்கும் நூர் திரைக்கு வந்தால் சன்னி லியோனின் கடந்தகால நீல வாழ்க்கையின் வண்ணம் பெருமளவு மாறும் என்கிறார்கள்.