Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிட வீடியோ காட்சி

Advertiesment
நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிட வீடியோ காட்சி
, ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (10:10 IST)
மாரடைப்பால் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54
 
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர்
 
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார். இவர்  நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட  பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
 
ஸ்ரீதேவியின் மறைவிற்கு ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர் நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட போது, ஸ்ரீதேவியின் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நன்றி: Gup Chup Masthi

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல் கூறியது என்ன தெரியுமா?