Publish Date: Sun, 25 Feb 2018 (21:28 IST)
Updated Date: Mon, 26 Feb 2018 (10:14 IST)
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.