Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி!

Advertiesment
சந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி!
, சனி, 28 மார்ச் 2020 (13:30 IST)
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு 'வியான்' என்று பெயரிட்டனர்.

அதன் பின்னர் 5 வருடங்கள் கழித்து வாடகை தாய் மூலம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி சமீசா ஷெட்டி குந்த்ரா என்ற அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்கும் இருந்துவருகின்றனர். இதனால் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு கொரோனா லாக்டவுன் பல விஷயங்ககளை கற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இத்தனை நாட்களாக தன் கனவு நோக்கி ஒட வைத்த வீட்டின் உதவி ஊழியர்கள் அத்தனை பேருக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழுதைக் குட்டியை துரத்தி சென்ற அர்னால்டு: வீட்டுல போரடிச்சா இப்படிதான் போல!