Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

Advertiesment
Salman khan vs Bishnoy gang

Prasanth Karthick

, ஞாயிறு, 10 நவம்பர் 2024 (12:36 IST)

சமீபமாக சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பிஷ்னோய் கும்பல், தற்போது சல்மான் கானுக்கு சவால் விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தி திரையிலகில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் சல்மான் கான். சமீபத்தில் சல்மான்கானின் வீட்டின் முன்னர் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்த விசாரணையில் அதை செய்தது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்ஸ்டர் கும்பல் என தெரிய வந்தது.

 

அதன்பின்னர் சில வாரங்களிலேயே சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை, பிஷ்னோய் கும்பல் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சல்மான்கானுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது சல்மான்கான், தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இந்த சிக்கந்தர் படத்தில் ‘மே சிக்கந்தர் ஹூன்’ என்ற பாடல் எழுதப்பட்டுள்ளதாகவும், அதில் லாரன்ஸ் பிஷ்னோய் - சல்மான்கான் பிரச்சினையை மையப்படுத்தி பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

 

அதை தொடர்ந்து தற்போது பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரை கொலை செய்யப் போவதாக மும்பை போலீஸாருக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். 

 

”அந்த பாடலை எழுதியவர் யாராக இருந்தாலும் விட மாட்டோம், அவருடைய வாழ்க்கையை ஒரு மாதத்தில் முடித்து விடுவோம். சல்மான்கானுக்கு தைரியம் இருந்தால் அவரது ஆளை (பாடலாசிரியரை) காப்பாற்ற வேண்டும்” என சவால் விடுத்துள்ளனர். இந்த கொலை மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?