Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்மான் கானை தமிழ் பேச வைத்த பிரபுதேவா - அதிரடி காட்டும் தபாங் பர்ஸ்ட் லுக்!

சல்மான் கானை தமிழ் பேச வைத்த பிரபுதேவா - அதிரடி காட்டும் தபாங் பர்ஸ்ட் லுக்!
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:40 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் தபாங். வசூலில் சக்கை போடு போட்ட இப்படம் தபாங் 1 தபாங் 2 என அடுத்தது வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் கல்லா காட்டியது. 


 
தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக தபாங் 3 என மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்தின் முதல் பாகத்தை அனுராக் காஷ்யப்பின் அண்ணன் அபினவ் காஷ்யப் இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இதன் மூன்றாம் பாகத்தை இயக்குனர் பிரபு தேவா இயக்கவிருக்கிறார். மேலும் இப்படம் நேரடியாக தமிழில் வெளியாகவுள்ளது.   

webdunia

 
10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான்- பிரபுதேவா கூட்டணி சேர்ந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். அண்மையில் கூட இப்படத்தில் பர்ஸ்ட் போஸ்டர் தமிழில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் டீசர் ஒன்று இணையத்தில் வெளியாகி #Dabangg3WithChulbulPandey என்ற ஹெஸ்டேக்கில் ட்ரெண்டாகி வருகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகினை சூப்பர் சிங்கருக்கு தயார்படுத்துகிறதா விஜய் டிவி? - வீடியோ