Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் ‘கணம்’ – மீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த்!

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் ‘கணம்’ – மீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த்!
, சனி, 19 ஜூன் 2021 (15:21 IST)
நடிகர் சர்வானந்த் நடிப்பில் கணம் என்ற படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இரண்டு பாதைகளிலும் வெற்றிகரமாக செயல்படுபவர் எஸ் ஆர் பிரபு. ஒரு பக்கம் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களைத் தயாரித்தாலும் மறுபக்கம் அருவி, மாயா போன்ற படங்களையும் தயாரித்து வருபவர்.

இந்நிலையில் குறும்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் சர்வானந்த் நடிக்கும் கணம் என்ற படத்தை இப்போது தயாரித்து வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது லீனா மணிமேகலையின் 'மாடத்தி' டிரைலர்!