Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்து காமெடியின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த புஷ்பா புருஷன்

வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த புஷ்பா புருஷன்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (18:07 IST)
புஷ்பா புருஷனால் தன்னுடைய வாய்ப்புகள் பறிபோவதாகப் புலம்பி வருகிறார் கருத்து காமெடி நடிகர்.


 

 
வெளிச்ச நடிகர் நடித்த லயன் படத்தின் முதல் பாகத்தில், கருத்து காமெடியன் தான் பிரதான காமெடியனாக நடித்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் கருத்து காமெடிக்கு பாதி, சந்தன காமெடிக்கு பாதி எனப் பிரித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர். அதாவது பரவாயில்லை. மூன்றாம் பாகத்தில் மொத்தமாக கருத்து காமெடியையே தூக்கிவிட்டு, பரோட்டாவால் புகழ்பெற்ற புஷ்பா புருஷனை காமெடியனாக்கிவிட்டனர்.

அதே இயக்குநர், தற்போது இன்னொரு போலீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் காமெடியனாக நடித்தவர் கருத்து காமெடி. ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்குப் பதிலாக புஷ்பா புருஷனையே கமிட் பண்ணியுள்ளார் இயக்குநர். இதனால் தன்னுடைய வாய்ப்புகளை புஷ்பா புருஷன் தட்டிப் பறிப்பதாகப் புலம்பி வருகிறார் கருத்து காமெடி நடிகர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான்… எத்தனையாவது இடம் தெரியுமா?

இரண்டாம் நாளில் 50 சதவீதம் குறைந்த ‘ரெட்ரோ’ பட வசூல்…!

இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர்தான் தியேட்டருக்கு வருகிறார்கள்.. அமீர் கான் ஆதங்கம்!

Sun-க்கு ஏது Sunday?... சூப்பர் ஸ்டாரின் ஓய்வு பற்றி பேசிய லதா ரஜினிகாந்த்!

ரோலக்ஸ் திரைப்படம் எப்ப வரும்னு எனக்கேத் தெரியாது… சூர்யா ரசிகர்களிடம் தெரிவித்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments