குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. 34 வயதான போதும் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் பிரியங்கா.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் துணை தேவை என தெரிவித்துள்ளார்.
நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். ஆண்களால் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் துணை தேவை. அதை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார்.