Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னிலியோன் இருக்காங்களா? வாலிபரை தொல்லை செய்த வாலிபர்கள்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (14:19 IST)
வாலிபர் ஒருவரின் மொபைல் எண்ணுக்கு பலர் போன் செய்து சன்னி லியோனோடு பேச வேண்டும் என கூறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் புனித் அகர்வால். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு தெரியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் “நான் சன்னி லியோனோடு பேச வேண்டும்” என கூறியிருக்கிறார். ராங் நம்பர் என்று சொல்லி அகர்வால் போனை கட் செய்து விட்டார். நாளாக நாளாக தொடர்ந்து பலர் போன் செய்து சன்னி லியோனோடு பேச வேண்டும் என நச்சரித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அகர்வால் போலீஸில் புகார் செய்துள்ளார். அப்போதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது. சன்னி லியோன் நடித்த இந்திபடம் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு காட்சியில் சன்னி லியோன் தனது மொபைல் எண்ணை சொல்வது போல வந்திருக்கிறது. அதில் சன்னிலியோன் சொன்ன மொபைல் எண் தற்செயலாக புனித் அகர்வாலின் மொபைல் எண்.

இதுகுறித்து போலீஸ் அவரிடம் “இது கிரிமினல் குற்றம் கிடையாது என்பதால் நீங்கள் சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள்” என ஆலோசனை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலிருந்தும்  அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. 12 வருடமாக உபயோகிக்கும் எண் என்பதாலும், பல்வேறு வியாபார தொடர்புகளுக்கும் அந்த எண்ணை உபயோகித்து வருவதாலும், எண்ணை மாற்றவும் முடியாமல், அழைப்பவர்களுக்கு பதில் சொல்லவும் முடியாமல் தவித்து வருகிறார் புனித் அகர்வால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரியின் ‘மாமன்’ திரைப்படம்!

நான் செய்த தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்… ‘மார்கன்’ பட இயக்குனருக்கு விஜய் ஆண்டனி அறிவுரை!

ஜெயிலர் 2 படத்தில் ரஜினியோடு இணைந்து நடிக்கிறாரா சந்தானம்?

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments