ஆவலுடன் எதிர்பார்த்த KGF-2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இதோ!

வெள்ளி, 13 மார்ச் 2020 (18:05 IST)
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளிவந்த இப்படத்தில்,  கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி  கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இந்நிலையில் தற்போது KGF படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்கள் இப்படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளிவந்த KGF  2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்றுமுன் இப்படத்தின் ரிலீஸ் தேதி 23-10-2020 என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

pic.twitter.com/wikZw2pzIZ

— Yash (@TheNameIsYash) March 13, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் முதல் இரவில் அட்டகாசம் செய்யும் சாந்தனு... ஜோடியானார் அதுல்யா!