அபிஷேக் பச்சனுடன் கைகோர்க்கும் நித்யா மேனன்

செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:31 IST)
மாதவன் நடித்த `ப்ரீத்'  வெப் சீரீஸ் பெரும்  வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து  , இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.இதனை மாயான்க் ஷர்மா இயக்குகிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த அமித் சத் இரண்டாம் பாகத்திலும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கவிருக்கிறார்.

மேலும் நடிகை நித்யா மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த சீரீஸில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளராம். சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகிவரும்  இந்த சீரியஸ் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ப்ரீத்' (Breathe) வெப்-சீரீஸின் இரண்டாம் பாகம் சுமார் 200 நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 'அர்ஜூன் ரெட்டி' புதிய ரீமேக்கின் டைட்டில் அறிவிப்பு!