பட வாய்ப்புகளுக்காக படுக்கை... பேட்ட வில்லன் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (08:53 IST)
திரைத்துறையை சேர்ந்த ஆண் , பெண் என பாலின வேறுபாடுகள் ஏதுமின்றி பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் சின்மயி - வைரமுத்து விவகாரம் முதல் பாலிவுட்டின் ஒரு ஆணே ஆண் நடிகரை படுக்கை அழைத்ததாக பல முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ரன்வீர் சிங் சினிமாவிற்கு நுழைந்த புதிதில் ஆண் ஒருவர் நேரடியாக தன்னிடம், படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதாக தெரிவித்து அதிர்ச்சியளித்தார். மேலும் தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா பேட்டி ஒன்றில், தான் புதுமுகமாக இருந்தபோது ஒருவர் தன் ஆணுறுப்பை காட்டச் சொன்னதாக கூறினார்.

இப்படி ஆண், பெண் பாகுபாடின்றி சினிமாத்துறையில் பாலியல் தொல்லை நடந்து வருவது அனைவ்ருக்கும் தெரிந்துள்ள நிலையில் பேட்ட படத்தின் வில்லன் நடிகரும் பிரபல பாலிவுட் நடிகருமான நவாஸுத்தீன் சித்திக் மட்டும் எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது,  "  சினிமா துறை மிகவும் பாதுகாப்பானது. அதை பற்றி தவறாக பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். சினிமா துறையின் பெயரை கெடுக்க முயற்சிக்கும் சிலரே இப்படியான போலி புகார்களை கூறுகிறார்கள்.

உங்களிடம் திறமை இருக்க வேண்டும். வேலை நடக்காவிட்டால் சினிமா துறை மீது பழியை போட்டு தவறாக பேசுகிறார்கள். எனவே முற்றிலும் போலியானது தான் இந்த மீ டூ இயக்கம் என்றார். என்னை இதுவரை யாரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததில்லை என கூறியுள்ளார். இவரது பேச்சை கேட்டு பாதிக்கப்பட்ட பல நடிகர், நடிகைகள் பெரும் கோபமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மெர்சல்’ படத்திற்கு பின் ‘ஜனநாயகன்’ தான்.. சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்..!

நீ வருவாய் என 2 மட்டுமில்ல.. 3யும் வருது.. ஓகே சொன்ன அஜித்! பெரிய ஷாக் கொடுத்த ராஜகுமாரன்

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்