Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சஞ்சய் தத்துக்கு ஜோடி - மசிவாரா மாதுரி தீட்சித்

சஞ்சய் தத்துக்கு ஜோடி - மசிவாரா மாதுரி தீட்சித்
, புதன், 10 ஆகஸ்ட் 2016 (19:48 IST)
சிறைப்பறவை சஞ்சய் தத் உள்ளே போனதும் தெரியவில்லை வெளியே வந்ததும் தெரியவில்லை.


 


பிக்பாக்கெட் அடித்தவனெல்லாம் பல வருடங்களாக சிறைக்குள் இருக்கையில் ஏ.கே.47 வைத்திருந்தது, குண்டு வெடிப்பில் தொடர்பு என் பல தீவிரவாத முத்திரை பதிந்த சஞ்சய் தத் உள்ளே போன வேகத்தில் வெளியே வந்திருக்கிறார். அதிலும் பாதி நாள் பரோலில் அவர் அடித்தது ஜாலியோ ஜிம்கானா.
 
கிட்டத்தட்ட தியாகி இமேஜுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் சஞ்சய் தத். அவரை வைத்து, கல் நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுபாஷ் கை முடிவு செய்துள்ளார். கல் நாயக்கில் சஞ்சய் தத் ஜோடியாக நடித்தவர் மாதுரிதீட்சித்.
 
திருமணமாகி குழந்தை கணவருடன் யுஎஸ்ஸில் செட்டிலான பிறகும், அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வருகிறார் மாதுரி. அவரை சஞ்சய் தத் படத்தில் கமிட் செய்ய காத்திருக்கிறது ஒரு கோஷ்டி. இது கல் நாயக் 2 படத்துக்காக அல்ல. 
 
மாதுரி மசிவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சு அருணாசலம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்