Publish Date: Mon, 09 Oct 2017 (18:12 IST)
Updated Date: Mon, 09 Oct 2017 (20:16 IST)
இந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெப் சீரியலி நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
சீன நிறுவன வெப் சீரியல் ஒன்றில் சன்னி லியோன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அந்த வெப் சீரியலில் சன்னி லியோனுக்கு பதில் கோலிவுட் நடிகை கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது.
இந்த சீரியலில் இளவரசி வேடத்திற்கு தான் சன்னி லியோன் கமிட்டானார். தற்போது அவருக்கு பதிலாக தமிழில் வரைப்படம் என்ற படத்தில் நடித்த சான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.