பிரபல பாலிவுட் நடிகை கிம் சர்மாவின் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால், கிம் சர்மா தற்போது பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.
ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா. சில படங்கள் மட்டும் நடித்த இவர் தொழிலதிபர் அலி பஞ்சானியை கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் கென்யாவில் இருந்தார். அலி தனது கள்ளக் காதலியுடன் சென்றதால், கிம் மீண்டும் மும்பைக்கே வந்துவிட்டார். மும்பையில் தனிமையில் இருக்கும் கிம் சர்மா பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.
கணவர் கென்யாவில் நடத்தி வந்த ஹோட்டலின் நிர்வாகியாக இருந்துள்ளார். கணவன் பிரிந்து சென்ற பிறகு அநத பதவியையும் தூக்கி எறிந்து விட்டு மும்பை வந்துவிட்டார். தற்போது அவர் மிகுந்த பண தட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.