ஷாஹித் கபூருக்கு அடித்தது அதிர்ஷ்டம்- விக்ரம் மகனுக்கும் கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (13:40 IST)
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வசூல் செய்த படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்த படம் தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் “கபீர் சிங்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

ஷாஹித் கபூர், கியாரா அத்வானி நடித்த இந்த படத்தையும் சந்தீப் ரெட்டியே இயக்கியுள்ளார். படம் ரிலீஸான 5வது நாளே 100 கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது. ஷாஹித் கபூரின் திரைப்படங்களிலேயே 100 கோடி வசூல் செய்த படமாக “கபீர் சிங்” இருக்கிறது. இதனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஷாஹித் கபூர்.

நேற்றுவரை படத்தின் வசூல் 190 கோடி. இன்றைய வசூலை சேர்த்தால் 200 கோடி வசூலித்த படமாக இருக்கும் என்கிறார்கள். இதே அர்ஜுன் ரெட்டியைதான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க “ஆதித்யா வர்மா” என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஆதித்யா வர்மாவும் இதே போல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்குமா, ஷாஹித் கபூருக்கு அடித்த அதிர்ஷ்டம் தனக்கும் அடிக்குமா என முதல் பட வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறாராம் துருவ் விக்ரம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments