ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இன்று வரலாறு காணாத அளவிற்கு மோசமாக சரிந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆக குறைந்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பொருளாதார ரீதியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்திற்கு தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமல்படுத்தி வருகிறார். மேலும், கனடா, மெக்சிகோ, சீனா போன்ற நாடுகளுக்கு வரியையும் அதிகரித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் கரன்சிகளின் மதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 67 பைசா குறைந்து 87.29 ஆக குறைந்துள்ளது.
இந்த ரூபாய் மதிப்பு சரிவினால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு லாபமாக இருக்கும் நிலையில், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.