Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ பாஸ் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும் – முதல்வர் உறுதி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:53 IST)
தமிழகத்தில் இ பாஸ் வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். அதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். மேலும் இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments