இந்தியில் ரீமேக் ஆகிறது 'டிராகன்' திரைப்படம்.. தயாரிப்பாளர்கள் யார் யார்?

Siva
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (18:56 IST)
தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'டிராகன்' திரைப்படம், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜியோ ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது. 
 
'டிராகன்' திரைப்படம், தமிழில் வெளியானபோது அதன் தனித்துவமான கதைக்களம், நகைச்சுவை மற்றும் காட்சி அமைப்புக்காக பரவலாக பாராட்டப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் இயக்குநர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. '
 
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் கைகோத்திருப்பது, 'டிராகன்' ரீமேக் படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை உறுதி செய்வதாக உள்ளது.
 
'டிராகன்' திரைப்படம் எந்த மொழியில் எடுத்தாலும் அதன் கதைக்களம் புதுமையாகவே இருக்கும் என்பதால், இந்தி ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments