ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் வின் டீசல் மற்றும் படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தீபிகா, நான் என் கற்பனையில் வின் டீசலுடன் அருமையான கெமிஸ்ட்ரி உள்ளேன், நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்றுவிட்டோம். ஆனால் இது எல்லாம் என் கற்பனையில் தான் என தெரிவித்தார்.
தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபிகா கற்பனையில் வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக கூறியுள்ளது சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.