நீங்களுமா… அதிர்ச்சியில் பாலிவுட் – மீ டூ வில் அமீர்கான் இயக்குனர்

செவ்வாய், 15 ஜனவரி 2019 (07:37 IST)
பிரபல பாலிவுட் இயக்குனரும் படத்தொகுப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி மீது அவருடைய உதவி இயக்குனர் ஒருவர் பாலியல் அத்து மீறல் புகார் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி முன்னாபாய் எம்.பி.பி.எஸ். 3 இடியட்ஸ். பி.கே. சஞ்சு ஆகியப் படங்களின் மூலம் இந்திய சினிமாவின் பெருமையை உலகறியச் செய்தவர். இவரது படங்களைப் பார்க்க திரையுலகில் உள்ளவர்கள் மத்தியிலேயே மிகப்பெரிய ஆர்வம் உண்டு.

கடைசியாக அவர் இயக்கிய சஞ்சு படத்தில் பணியாற்றிய பெண் உதவி இயக்குனர் ஒருவர்தான் அவர் மேல் இந்த மீடூ புகாரைக் கூறியுள்ளார். சஞ்சு படத்தின் படப்பிடிப்பின் போது 6 மாத காலங்கள் தான் ஹிரானியின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் இது சம்மந்தமாக சஞ்சு படத்தின் இணைத் தயாரிப்பாளரான விது வினோத் சோப்ராவு மற்றும் அவரது மனைவி அனுபமா சோப்ராவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறியுள்ளது.

பத்திரிக்கையாளரான அனுபமா சோப்ரா,  பெண் உதவி இயக்குனர் மின்னஞ்சல் அனுப்பியது உண்மைதான் எனக் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ஹிரானி தனது வழக்கறிஞர் மூலமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தப் புகார் காரணமாக பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ரா இயக்கத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ள `எக் லட்கிகோ தேகாதோ யேசா லகா’ படத்தின் போஸ்டரிலிருந்து ஹிரானியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் ராஜ்குமார் ஹிரானி பணிபுரிந்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கதை திருட்டெல்லாம் பழசு; போஸ்டர் திருட்டுதான் புதுசு…